வெட்டாத ஆயுதம்
நாட்கள் சென்றது அந்த ஊருக்கு ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் ஊழியம் செய்வதற்கு வந்தார். அதுமட்டுமல்லாமல் அவரிடம் இருந்த கர்த்தருடைய கிருபை அவருக்கு அந்த ஊரில் மிகுந்த மரியாதைக்குரிய மனுஷனாக மாற்றியது, அதுமட்டுமல்லாமல் அவரிடத்தில் அனேகர் பயபக்திக்குரியவர்களாக மாறினர். இதைப் பார்த்த அந்த வில்லியம் தான் மற்றவர்களை பயமுறுத்தினால் மாத்திரமே தன்னுடைய ஆயுதத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். மற்றப்படி யாருமே தனக்கு முன்பாக உண்மையாக பயப்படுவதில்லை என்கிறதான ஒரு கோப உணர்வு அவனிடம் காணப்பட்டது.
இதினிமித்தம் அந்த ஊழியக்காரரிடம் மோதும்படியாக கடந்து சென்றான், தேவையில்லாமல் அவரிடம் சென்று பிரச்சனைகள் உருவாக்கினான் ஆனால் அவர் ஒன்றுமே செய்யவேயில்லை, இதனால் இந்த வாலிபன் எரிச்சல் அடைந்து அவரை ஒரு சமயம் அடித்துவிட்டான். இதற்கும் அவர் கோபப்படாமல் அமைதியாக சென்று விட்டார். இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த அந்த வாலிபன் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்க அவரை பின் தொடர்ந்து சென்றார்.
அவனுக்கு அவருடைய செயல்கள் ஆச்சரியமாக இருந்தது எப்படியென்றால் அந்த ஊழியக்காரர் தன்னை அடித்த அந்த வாலிபனுக்காக முழங்கால் படியிட்டு அவன் மனந்திரும்பும்படியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். இத்தகைய காரியம் அந்த வாலிபனுக்கு கோழைத்தனமாக இருந்தது, ஆகவே மேலும் மேலும் அவன் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவருடைய ஜெப ஆயுதத்துக்கு முன்பாக இந்த வாலிபனுடைய மாமிசம் ஆயுதம் விழுந்து போனது என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அவருடைய ஜெபம் இந்த வாலிபனைப் படுத்தப்படுக்கையாக்கி விட்டது, இவனுக்கு ஒன்றும் புரியவில்லை நாட்கள் செல்ல செல்ல பயம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஊழியக்காரர் அந்த தேடிச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார் அவருடைய ஜெபம் அந்த வாலிபனை மறுபடியும் பலத்தோடு எழுப்பினது. இதை பார்த்த அந்த வாலிபனுக்கு ஒரு காரியம் புரிந்தது, இந்த உலகத்தில் மனுஷனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் எல்லாம் வெட்டாத அதாவது பற்கள் இல்லாத ஆயுதம் என்பதை புரிந்து கொண்டான். ஆகவே அவன் ஒரு முடிவு எடுத்தான் என்னவென்றால் அந்த ஊழியக்காரரிடம் சென்று அந்த அழியாத, வெட்டுகிற ஆயுதத்தை பெற்றுக் கொள்வதற்கு ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டான்.வேதம் சொல்லுகிறது, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் பிலிப்பியர் 4:6.
குறிப்பு:
ஜெபம் என்கிற ஒரு ஆயுதம் நம்மிடம் இருக்குமானால் இந்த உலகத்தில் எந்தவொரு ஆயுதமும் நமக்கு முன்பாக வாய்க்காமல் போய்விடும். ஆகவே இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறவர்கள் கத்தியையும், கம்பையும், பழிவாங்குதல், எரிச்சல், பொறாமை, மேட்டிமை போன்ற ஆயுதத்தை எடுக்காமல் இயேசுவின் சிலுவையை மாத்திரம் எடுத்துக் கொண்டு பயணம் செய்யுங்கள் அப்பொழுது மாத்திரமே உங்களிடத்தில் அவர்கள் மெய்யான தெய்வமாகிய இயேசுவைப் பார்ப்பார்கள்.
No comments